தூத்துக்குடி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து அவதூறாக பேசி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் செல்வராஜ் (36 வயது). தி.மு.க. பிரமுகரான இவர் தற்போது திருப்பூரில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பற்றி அவதூறாக பேசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டார். இதுதொடர்பாக த.வெ.க. நிர்வாகி ஒருவர் சூரங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செல்வராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் திருப்பூருக்கு சென்று செல்வராஜை அதிரடியாக கைது செய்தனர். அவரை நேற்று முன்தினம் இரவில் விளாத்திகுளம் பகுதிக்கு அழைத்து வந்து உரிமைகள் மற்றும் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து நீதிபதி விசாரணை நடத்திய நிலையில், செல்வராஜ் தினமும் காலை 10.30 மணிக்கு சூரங்குடி போலீஸ் நிலையத்தில் 30 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-arrested-for-defamatory-instagram-post-against-minister-athav-arjuna




