சென்னை, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மற்றும் கோவை உள்பட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 6 இடங்கள் மற்றும் மதுரையில் 1 இடம் உட்பட பல இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. போதைப்பொருள் வழக்கு கடந்த 2024-ம் ஆண்டு அந்தமான் பகுதியில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் பிடிபட்ட 7 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பர்மாவில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. மியான்மரில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/nia-officials-conduct-raids-at-various-locations-in-tamil-nadu




