“பங்குச்சந்தையில் முதலீடு பண்ணி அந்த ஆள் கோடீஸ்வரன் ஆயிட்டாராம், இந்த ஆள் ஜீரோ ஆயிட்டாராம்!” – டீக்கடை முதல் சோஷியல் மீடியா வரை தினமும் கேட்கும் வார்த்தை இது. ஆளுக்காள் ஓடி ஓடி சம்பாதிக்கிறோம், ஆசை ஆசையாக முதலீடு செய்கிறோம். ஆனால், நம்மை அறியாமலேயே ஒரு பெரிய ‘சுழலில்’ போய் மாட்டிக்கொள்கிறோம். அது என்ன? பேராசையும் ரமேஷின் கதையும்! ரமேஷை எடுத்துக்கொள்வோம். மாதம் ₹50,000 சம்பளம். “ஒரே வருஷத்துல பணத்தை ரெண்டு மடங்கு ஆக்கலாம்” என்று யூடியூப் பார்த்து, தனக்குத் தெரியாத ஹை-ரிஸ்க் பங்குகள் மற்றும் ஃபியூச்சர்ஸில் (Futures & Options) கையில் இருக்கும் சேமிப்பு முழுவதையும் போடுகிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் லாபம் வருகிறது. ஆனால், ஒரு நாள் சந்தை சறுக்கும்போது, மொத்த சேமிப்பும் ‘காணாமல்’ போகிறது. நாம் செய்யும் மிகப்பெரிய தவறு: “100 பேரில் 90 பேர் ஜெயித்துவிட்டார்கள்” என்ற புள்ளிவிவரத்தைப் பார்த்து நாமும் குதிக்கிறோம். ஆனால், அந்த 10 பேர் சந்தையை விட்டே தூக்கி எறியப்பட்ட கதை நமக்குத் தெரிவதில்லை. ‘எர்கோடிசிட்டி’ (Ergodicity) என்றால் என்ன? அது எப்படி ரிஸ்க்கை குறைக்கிறது? இதை எளிமையாகப் புரிந்துகொள்ள, ஒரு நாணயம் சுண்டும் விளையாட்டை (Coin Toss Game) உதாரணமாகப் பார்ப்போம். கொஞ்சம் கவனமாகப் படிக்கவும்! உங்களிடம் ₹100 இருக்கிறது. ஒரு நாணயத்தைச் சுண்டுகிறீர்கள். தலை விழுந்தால்: உங்கள் பணம் 50% அதிகரிக்கும் (₹100 ➔ ₹150). பூ விழுந்தால்: உங்கள் பணம் 40% குறையும் (₹100 ➔ ₹60). கணிதப்படி பார்த்தால், ஜெயிக்க 50% வாய்ப்பு, தோற்க 50% வாய்ப்பு. லாபம் (+50%), நஷ்டத்தை (+50% - 40% = +10%) விட அதிகம். எனவே, இது நல்ல லாபம் தரும் விளையாட்டு போலத் தோன்றும். இப்போது இரண்டு சூழல்களைப் பார்ப்போம்: 1. குழுவின் கணக்கு (Group Average) 100 பேர் ஆளுக்கு ₹100 வைத்துக்கொண்டு ஒரே நேரத்தில் இந்த விளையாட்டை ஆடுகிறார்கள். 50 பேருக்கு தலை விழுகிறது: ஆளுக்கு ₹150 பெறுகிறார்கள். 50 பேருக்கு பூ விழுகிறது: ஆளுக்கு ₹60 பெறுகிறார்கள். இப்போது 100 பேரின் மொத்தப் பணத்தைக் கூட்டி சராசரி பார்த்தால், ஆளுக்கு ₹105 இருக்கும். முடிவு: குழுவாகப் பார்க்கும்போது ஆளுக்கு ₹5 லாபம் (5% வளர்ச்சி) கிடைத்திருக்கிறது. இதைப் பார்க்கும் ஒருவர், "இது நல்ல லாபம் தரும் முதலீடு" என்று நினைப்பார். 2. தனிநபரின் கணக்கு (Time Average) இப்போது அதே விளையாட்டை நீங்கள் மட்டும் தனியாக தொடர்ந்து 4 முறை ஆடுகிறீர்கள். (2 முறை தலை, 2 முறை பூ விழுகிறது எனக் வைப்போம்). முதல் ஆட்டம் (தலை): ₹100 ➔ ₹150 ஆகிறது (+50%) இரண்டாம் ஆட்டம் (பூ): ₹150-ல் 40% நஷ்டம் ➔ ₹90 ஆகிறது. மூன்றாம் ஆட்டம் (தலை): ₹90-ல் 50% லாபம் ➔ ₹135 ஆகிறது. நான்காம் ஆட்டம் (பூ): ₹135-ல் 40% நஷ்டம் ➔ ₹81 ஆகிறது. முடிவு: தொடக்கத்தில் உங்களிடம் இருந்த ₹100, இப்போது ₹81 ஆகக் குறைந்துவிட்டது! (19% நஷ்டம்). வித்தியாசம் என்ன? ஏன் இப்படி நடக்கிறது? குழுவில்: ஒருவர் தோற்பது அடுத்த நபரைப் பாதிக்காது. 50 பேர் தோற்றாலும், மீதி 50 பேரின் லாபம் குழுவின் சராசரியை உயர்த்துகிறது. தனிநபரிடம்: உங்கள் நேற்றைய நஷ்டத்தின் மீதே இன்றைய ஆட்டம் நடக்கிறது. பணம் குறையக் குறைய, மீண்டும் பழைய நிலைக்கு வருவது கடினமாகிறது. முக்கியமாக, ஏதோ ஒரு கட்டத்தில் உங்கள் பணம் ₹0 (பூஜ்ஜியம்) ஆகிவிட்டால், உங்களால் அடுத்த ஆட்டத்தையே ஆட முடியாது. ஆட்டம் முடிந்தது! எனவே, Ergodicity என்பது தனி நபர் ரிஸ்கைக் குறைக்கும் கான்செப்ட் என்று புரிந்துகொள்ளலாம். Ergodic தன்மை கொண்ட முதலீடுகளில் மட்டுமே ரிஸ்க்கைக் குறைத்து லாபத்தை பெற முடியும். இதற்கும் முதலீட்டிற்கும் என்ன தொடர்பு? பங்குச்சந்தையில் நஷ்டம் கூட்டு வட்டி போலச் செயல்படும்: ₹100 உள்ள பங்கு 50% சரிந்தால் ₹50 ஆகும். ஆனால், அது மீண்டும் ₹100 ஆக வேண்டுமென்றால் 100% உயர வேண்டும். அதிக ரிஸ்க் எடுத்து மொத்தப் பணத்தையும் இழந்துவிட்டால் (₹0), சந்தை எவ்வளவு உயர்ந்தாலும் உங்களால் லாபம் பார்க்க முடியாது. (இது Futures & Options'ல் சாத்தியம்). எனவேதான், மொத்தப் பணத்தையும் பூஜ்ஜியமாக்கும் எந்தவொரு ரிஸ்க்கையும் முதலீட்டில் எடுக்கக் கூடாது என்கிறார்கள். தீர்வு: ரிஸ்க்கைக் குறைத்து ஜெயிக்க 3 பொன்னான வழிகள்! நீண்ட காலத்தில் பணக்காரராக, ஆட்டத்தை விட்டு வெளியேறாமல் நிலைத்து நிற்பதே ஒரே வழி. அதற்கு என்ன செய்ய வேண்டும்? Emergency Fund: 6 மாத குடும்பச் செலவுத் தொகையை எமர்ஜென்சி ஃபண்டாக பிக்ஸட் டெபாசிட் அல்லது லிக்விட் ஃபண்டில் வைப்பது முதல் படி.பார்பெல் உத்தி Barbell Strategy: உங்கள் முதலீட்டில் 80-90% தொகையை பாதுகாப்பான ஃபண்டுகளிலும், தங்கம் மற்றும் பி.பி.எஃப் (PPF) போன்ற பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும். மீதி 10-20% தொகையை மட்டுமே ரிஸ்க்கான முதலீடுகளுக்கு மாற்ற வேண்டும்! எஸ்.ஐ.பி (SIP) எனும் மந்திரம்: எப்போதும் ஒரே அடியாகப் பணத்தைப் போடாமல், மாதந்தோறும் சீரான முதலீடு செய்யுங்கள்! ரிஸ்க்கைக் குறைத்து பணக்காரர் ஆகுங்கள்! லாபம் வழங்கும் Weekend Online Classes: நிகழ்ச்சி 1: SIP முதல் SWP வரை. - மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் முதலீடு செய்ய நினைக்கும் NRI-களுக்கான முதலீடு வழிகாட்டல் நிகழ்ச்சி நாள்: ஜூலை 25, 2026, புதன் நேரம்: மதியம் 12:30 - 2:00 மணி - இந்திய நேரம் பேச்சாளர்: டீம் லாபம் நிகழ்ச்சி 2: தலைப்பு: மாதாமாதம் ₹25000 இரண்டாவது வருமானம் பெறுவது எப்படி? - சென்னை வாழ் மக்களுக்கான சிறப்பு நிதி வழிகாட்டல் நிகழ்ச்சி வேலை செய்யும்போதே, உங்கள் பணத்தை உங்களுக்காக உழைக்க வையுங்கள்! நாள்: ஜூலை 26, 2026, ஞாயிறு நேரம்: காலை 11 - 12:30 மணி - இந்திய நேரம் பேச்சாளர்: லாபம் டீம் செல்வம் சேர்க்க வேண்டுமா? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு மூலம் நீங்கள் செல்வம் சேர்க்க வேண்டுமா? சரியான திட்டங்களில் முதலீடு செய்து உங்கள் செல்வத்தைப் பெருக்க, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோக நிறுவனமான 'லாபம்' நிபுணர்களிடம் பேசுங்கள். நம்பகமான வழிகாட்டலைப் பெற்று முதலீட்டைத் துவங்குங்கள். இன்றே நிபுணரிடம் பேச, கால் புக் செய்யுங்கள்: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/personal-finance/money/how-to-minimise-risk-in-investment-through-ergodicity




