புதுடெல்லி, இந்திய அணியின் அனுபவம் மிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், இந்திய அணி வேகப்பந்துவீச்சில் சிறப்பாக செய்லபட முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் தொலைநோக்கு பார்வையே முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு முன், உள்நாட்டிலேயே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாட வைத்தனர். அதுவே அவர்களின் தொலைநோக்கு பார்வையை காட்டியது. இந்தியாவின் வேகப்பந்து தாக்குதலை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இதுபோன்ற சிறிய முடிவுகள்தான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்று புவனேஷ்வர் குமார் கூறினார். கோலி–சாஸ்திரி தலைமையிலான காலகட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு மண்ணில் பல மறக்க முடியாத டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றது. அந்த வெற்றிகளுக்கு வலுவான வேகப்பந்து தாக்குதலை உருவாக்கிய திட்டமிடலே அடித்தளமாக இருந்ததாக புவனேஷ்வர் குமார் பாராட்டியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/they-are-the-reason-for-the-excellent-performance-in-fast-bowling-bhuvneshwar-kumar




