நெல்லை, நெல்லை மாநகரம், தச்சநல்லூர் பகுதியில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 17 வயது சிறுமிக்கு குழந்தை நெல்லை மாநகர பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 17 வயது மகள் உள்ளார். இந்த சிறுமி பள்ளிக்கு செல்லாத நிலையில் கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்தார். இதையறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதேநேரம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதிய நிலையில், யாருக்கும் தெரியாமல் மறைத்து வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரி நிர்வாகம் விசாரித்தபோது சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என்பது தெரியவந்தது. வாலிபர் கைது உடனடியாக தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமி, தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் தான் காரணம் என தெரிவித்தார். அந்த நபரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். அவருக்கு டி.என்.ஏ. மரபணு பரிசோதனை செய்ததில், சிறுமியின் கர்ப்பத்திற்கு அவர் காரணம் இல்லை என்று தெரியவந்தது. ஆனாலும் அவர் சிறுமியை பலாத்காரம் செய்ததால் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. தொழிலாளி போக்சோவில் கைது இந்த நிலையில் தச்சநல்லூர் கீழக்கரையை சேர்ந்த தொழிலாளியான அந்தோணிராஜ் (வயது 40) என்பவர் தான் தனது கர்ப்பத்துக்கு காரணம் என்று அந்த சிறுமி போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் நேற்று கைது செய்தனர். தொழிலாளிக்கு மரபணு பரிசோதனை முதற்கட்ட விசாரணையில், அவர் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி மிரட்டி பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கும் மரபணு பரிசோதனை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதாவது அந்த சிறுமியின் குழந்தையின் மரபணுவுடன், அந்தோணிராஜ் மரபணுவை ஒப்பிட்டு பார்த்து கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/girl-threatened-and-raped-in-paddy-field-worker-arrested-after-giving-birth




