நேபாளத்தில் நேற்று (ஆகஸ்ட் 26) வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது நேற்று காலை உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் போடேகோசி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் திபெத் திசையிலிருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தினால் திபெத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் திமுரே, அதை ஒட்டிய சியாப்ருபேசி பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் ராணுவ அறிக்கையின்படி, வெள்ளத்தினால் வீடுகள், வாகனங்கள், பொருள்கள், பிற சொத்துகள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதுவரையிலான தரவுகள். இதுவரையில் வெளியாகி உள்ள தகவலின்படி, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தபட்சமாக 157–160 பேர் உயிரிழந்துள்ளனர். பல நூறு பேர் காணாமல் போயுள்ளனர். இதில் சுமார் 133 இந்தியர்களும் அடக்கம் (காணாமல் போனவர்களில்). மீட்புப் பணி நேபாள அரசின் தகவல்களின்படி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 14 ஹெலிகாப்டர்களுடன் பேரிடர் மீட்புக் குழுக்கள் களமிறங்கியுள்ளன. இதில் நேபாளத்தின் ராணுவம், ஆயுதப் படை மற்றும் நேபாளக் காவல்துறையினரும் அடக்கம். அதுமட்டுமல்லாமல், இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் நேபாளத்திற்கு இந்தப் பேரிடரில் உதவி செய்ய களமிறங்கியுள்ளன. Nepal Flood: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு - கலங்க வைக்கும் கோரக் காட்சிகள்! | Video முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/environment/disasters/nepal-floods-kill-160-hundreds-missing-after-sudden-river-surge




