சென்னை, த.வெ.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என மாற்றப்பட்டது. முதல்-அமைச்சர் அதன்படி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தை பெரியாரின் பிறந்தநாளான நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியது. இதனை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளதால், அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே முதல்-அமைச்சர் விஜய் வருகிற 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதுதொடர்பாக சமூக நலத்துறை செயலாளர் பல்லவி பல்தேவ் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும். என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-to-launch-school-breakfast-expansion-scheme-on-22nd



