பொருளாதார வலிமை கொண்ட உலகின் முக்கிய வளர்ந்து வரும் நாடுகள் ஒன்றிணைந்து, வர்த்தகம், நிதி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நடத்தும் சர்வதேச உச்சிமாநாடு BRICS. 2026-ம் ஆண்டுக்கான BRICS உச்சி மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைவகிக்கும் இந்த மாநாட்டில் சுமார் 20 நாடுகளின் தலைவர்கள் நேரில் பங்கேற்கின்றனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ, எகிப்து அதிபர் அப்துல் பத்தா அல்-சிசி, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கும் முக்கியத் தலைவர்கள். BRICS 2026 பிரேசில் நாட்டின் சார்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மௌரோ வியாரா கலந்துகொள்கிறார். மேலும், BRICS கூட்டாண்மை நாடுகளின் பிரதிநிதிகளாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் தோகாயேவ், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விராகுல், கியூபா அதிபர் மிகுல் டயஸ்-கானெல், நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு, உஸ்பெக்கிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ் மற்றும் உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுப்போ ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இவர்கள் தவிர, ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸும் இந்த உச்சிமாநாட்டில் நேரில் பங்கேற்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் BRICS உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரது அதிகாரப்பூர்வ விமானம் தரையிறங்கியது. இந்தப் பயணத்தின் போது, அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள உரையாடல்களுடன், பல்வேறு இருதரப்பு சந்திப்புகளிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். பிப்ரவரி 2022-ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, BRICS உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடதக்கது. BRICS மாநாடு: இந்தியா வரும் ஜி ஜின்பிங், புதின், ஈரான் அதிபர் மற்றும் இன்னும் பலர் - ஏன் முக்கியம்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/twenty-world-leaders-are-participating-in-the-brics-2026-summit



