சென்னை, தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை உண்ணி காய்ச்சல் பரவல் அதிகமாக இருக்கும் தமிழக சுகாதார துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறுகையில், பருவமழை காரணங்களால் பல்வேறு வகையான நோய் பாதிப்புகள் மக்களிடையே பரவலாக கண்டறியப்பட்டு வருகிறது. உண்ணி காய்ச்சல் அதிகரிப்பு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாமல், பலவிதமான காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதில் ஒருவகையான காய்ச்சலாக, தற்போது ‘ஸ்க்ரம் டைபஸ்’ (scrub typhus) என்று அழைக்கப்படும் உண்ணி காய்ச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வகையான காய்ச்சல் ’ஓரியண்டியா சுட்சுகாமுஷி’ என்ற பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. இந்தவகையான பாக்டீரியாக்கள் புல் மற்றும் புதர்களில் காணப்படும் ஒட்டுண்ணியாக வாழ்கிறது. அறிகுறிகள் என்ன? இந்த பாக்டீரியா முன்பு காட்டுப் பகுதிகளில் இருந்து பரவியது; ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக அனைத்து இடங்களிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. * இந்த காய்ச்சல் பாதிப்பின் போது, பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு உடல்வழி, சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். * இந்த வகையான ஏதாவது ஒரு அறிகுறிகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். * மேலும் இந்த காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, ஆனால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tick-borne-encephalitis-outbreak-likely-to-continue-until-january-health-ministry




