ஈரோடு மாவட்டம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான வினோதினி. திருப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவரைத் திருமணம் செய்து ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்கிற நபருடன் வினோதினிக்கு நட்பு ஏற்பட்டு, நெருக்கமாகப் பழகியுள்ளனர். வினோதினியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வினோதினியின் கணவருக்குத் தொடர்ந்து அனுப்பி வந்திருக்கிறார் நவனீதகிருஷ்ணன். இதனால் வினோதினி மீது வெறுப்படைந்த அவரின் கணவர், வினோதினியை அவரின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் நட்பான நவனீதகிருஷ்ணனுடன் பழகுவதைத் தவிர்த்து வந்திருக்கிறார் வினோதினி. மகனுடன் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்த வினோதினியைச் சந்திக்க கடந்த திங்கள்கிழமை இரவு ஈரோட்டில் உள்ள வீட்டிற்கு வந்த நவனீதகிருஷ்ணன், வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். வினோதினி திடீரென வினோதினி மீது மண்ணெண்ணெயை ஊற்றி கொளுத்தியிருக்கிறார். உடல் கருகி துடிதுடிக்கப் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் வினோதினி. தீக்காயங்களுடன் உயிர் தப்பிய நவனீதகிருஷ்ணன், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வினோதினி அளித்த மரண வாக்குமூலத்தில், நவனீதகிருஷ்ணன் தன்னை தீ வைத்து எரித்ததாகக் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் ஈரோடு காவல்துறையினர் கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி: புறா பிடித்துத் தருவதாகக் கூட்டிச் சென்று 2 சிறுவர்கள் கொடூரக் கொலை; 19 வயது இளைஞர் கைது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/instagram-friendship-leads-to-tragedy-24-year-old-woman-burned-to-death-in-horrific-incident




