சென்னை, அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2026 அன்று முதல் தொடங்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தகவல். மாணாக்கர் சேர்க்கை 2026-27 கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2026 முதல் 20.08.2026 வரை நடைபெறவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:- எம்.எட். பாடப்பிரிவு 2026-27 தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 11.08.2026 அன்று முதல் இணையவழியில் தொடங்கும். மாணாக்கர்கள் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். மேற்படி இணையதள முகவரியில் 20.08.2026 வரைபதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தரவரிசைப்பட்டியல் பின்னர். இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2026 அன்று வெளியிடப்படும். மாணாக்கர் சேர்க்கை 27.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2026 அன்று முதல் துவங்கும். இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/education-and-employment/student-admissions-for-med-course-in-government-colleges-begin-tomorrow




