சென்னை, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இல்லாததால் சட்டப்பேரவை சீக்கிரம் முடிந்துவிடும் என நினைத்தேன் என்று தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பேசினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், பேரவையில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கடுமையான நடவடிக்கை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் பெண் ஒருவர் அமில வீச்சுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தினார். அவையில் இல்லை என்றாலும். பின்னர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சட்டப்பேரவையில் இல்லாததை குறிப்பிட்டுப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ஆதவ் அர்ஜுனா இன்று அவையில் இல்லை என்பதால், ஒன்றரை மணிக்கெல்லாம் பேரவை முடிந்துவிடும் என நினைத்தேன். ஆனால், பேரவை நீண்டு கொண்டே செல்கிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-thought-the-assembly-would-end-soon-due-to-the-absence-of-adhav-arjuna-premalatha-vijayakanth




