சென்னை, ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில், முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. த.வெ.க. ஆட்சி முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, சதித்திட்டம் தீட்டி த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் குதிரை பேரம் நடத்துவதாக அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, தன்னிடம் ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசினார்கள் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனு மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். செந்தில் பாலாஜி விசாரணை முடிவில், த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் கூறிய அறிவுரையின்பேரில்தான் த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தனர். அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியையும், அவரது சகோதரர் அசோக்குமாரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அந்த சம்மனில், ஜூலை 6-ந்தேதி (அதாவது நேற்று) ஆஜராகவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதன்படி நேற்று அவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆஜராகவில்லை ஆனால், செந்தில்பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பி செல்லாமல் தடுப்பதற்காக, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லூக்-அவுட்' நோட்டீஸ் கொடுத்து, போலீசார் உஷார்படுத்தியுள்ளனர். அவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை, மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் இன்னொரு முறை அவர்களுக்கு சம்மன் அனுப்பலாமா? என்பது குறித்தும் போலீசார் ஆலோசித்து வந்தனர். முன்ஜாமின் இந்நிலையில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குதிரை பேரத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. த.வெ.க. எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கு தொடர்பான விசாரணைக்கு சம்மன் அனுப்பி, அதில் ஆஜராகாத நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/senthil-balaji-files-anticipatory-bail-plea-in-madras-high-court




