டோக்கியோ, ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெண்கலப்பதக்கம் வென்றது. பாகிஸ்தான் - வங்காளதேசம் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், வங்காளதேசம் மோதின. பாகிஸ்தான் 145 ரன்கள் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் பாத்திமா சனா அதிகபட்சமாக 45 ரன்கள் குவித்தார். வங்காளதேசம் தரப்பில் அந்த அணியின் நஹிடா அக்தர், ஷொர்னொ அக்தர், ரிடு மொனி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 146 ரன்கள் இலக்கு இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றலாம் என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. வெண்கலம் வென்ற பாகிஸ்தான் ஆனால், பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் வங்காளதேசம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஷெர்மின் அக்தர் அதிகபட்சமாக 46 ரன்கள் சேர்த்தார். பாகிஸ்தான் அணியின் உம் இ ஹனி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் வங்காளதேசத்தை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டு தொடரில் பெண்கள் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெண்கலப்பதக்கம் வென்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/asian-womens-cricket-pakistan-win-bronze-medal




