மும்பை, மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணலால்(வயது 41). இவரது மனைவி யாமினி. இவர்களது குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பண்டிகையின் போது நடனமாடுவதற்கு யாமினி பயிற்சி பெற்று வந்தார். இதன்படி நேற்று இரவு 10 மணிக்கு நடனப் பயிற்சிக்கு யாமினி புறப்பட்டார். அப்போது வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவரது கணவர் கிருஷ்ணலால் தனக்கு உணவு பரிமாறுமாறு யாமினியிடம் கூறியிருக்கிறார். நடனப் பயிற்சிக்கு நேரமாகிவிட்டது என யாமினி கூறவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணலால், தனது மனைவி யாமினியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் யாமினியின் கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு யாமினி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை முதலில் காவல்துறையிடம் இருந்து கிருஷ்ணலால் மறைத்துள்ளார். ஆனால் யாமினியின் பெற்றோர் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து, யாமினியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது உடலில் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணலாலிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், யாமினியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து கிருஷ்ணலால் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணலால்-யாமினி தம்பதிக்கு 14 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/woman-beaten-to-death-after-leaving-for-dance-practice-without-serving-food-husbands-brutal-act




