சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு சவரன் ரூ.1,16,040-க்கும், ஒரு கிராம் ரூ.14,505-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960-க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,370-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று காலையில் தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,385-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் தங்கத்தின் விலை குறைவு இந்நிலையில் காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்துள்ளது. அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.14,175க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையைப் பொறுத்த வரையில் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/sudden-drop-in-gold-prices-a-decrease-of-1680-per-sovereign-in-a-single-day




