திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ள கல்லகம் பகுதியில் கலகம் ஏரி உள்ளது. திருச்சி- அரியலூர் மாவட்டங்களின் எல்லையில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த ஏரியின் அருகில் காப்புக் காடுகள் உள்ளதால், அந்தக் காடுகளில் மான்கள் அதிக அளவு வசித்து வருகின்றன. மான் அந்த மான்கள் தண்ணீர் அருந்துவதற்காக சாலைகளைக் கடந்து இந்த ஏரிக்கு வரும்போது, வாகனங்களில் அடிப்பட்டு இறக்கும் சூழல் உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் மான்களைப் பாதுகாக்க மான் பூங்கா அமைக்க அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து பேசிய அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டேனியல், "இந்தப் பகுதியில் அதிகளவு மான்கள் வசிக்கின்றன. அவை இங்கு செல்லும் ரயில்களிலும், சாலைகளில் செல்லும் வாகனங்களிலும் அடிப்பட்டி இறக்கின்றன. இன்று அவை வசிக்கும் காப்புக் காடுகளில் தண்ணீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால், தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வரும்போது வாகனங்களில் அவை அடிப்பட்டு இறப்பதைத் தடுக்கும்விதமாக இந்தப் பகுதியில் மான் பூங்கா அமைக்க வனத்துறைக்குக் கோரிக்கை வைத்தேன். ஆனால், வனத்துறை சார்பில், 'காப்புக் காடுகளிலிருந்து தண்ணீர் அருந்துவதற்காக வந்து செல்லும்போது சில நேரங்களில் வாகனங்களில் அடிப்பட்டு மான்கள் இறக்க நேரிடுகிறது. deniyal ஆனால், மான்கள் வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதைத் தடுக்க வாகன தணிக்கையின்போது, 'மெதுவாக செல்லுங்கள்' என்று அவ்வப்போது ஓட்டுநர்களுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அதேபோல், கல்லகம் ஏரியில் மான் பூங்கா அமைப்பதற்கான ஏற்ற சூழ்நிலைக்கான இடம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்' என்று சொல்லி இருக்காங்க. மான்களை எப்படித்தான் காப்பாற்றுவது? வாகனங்களில் அடிப்பட்டு மான்களைப் பாதுகாக்கு போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். திருச்சி: வண்டல் மண் எடுக்க ரூ.4,000 லஞ்சம் - நீர்வளத்துறை அதிகாரி கைது! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/deer-dying-after-being-hit-by-vehicles-demand-for-a-deer-park




