திருப்பதி, கணவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோவை பார்த்து மனைவி அதிர்ச்சி அடைந்தார். குடும்பத்தினருடன் நெருக்கம் தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், துப்ரான் மண்டலம், குண்ட்ரெட்டி பள்ளியை சேர்ந்தவர் மன்னே (வயது 60). இவரது மனைவி சுஜாதா (வயது 55) இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மேட்சல் மாவட்டத்தில் உள்ள கவுகூர் தர்காவிற்கு சென்று வந்தனர். அங்கு, ஹேமந்த் என்ற நபர் அறிமுகமானார். தனக்கு யாரும் இல்லை, தான் ஒரு அனாதை என்று கூறி, அவர் அவர்களுடன் நெருக்கமாக பழகினார். திருமணம் பின்னர், அவர் குண்ட ரெட்டிபள்ளிக்கு சென்று அங்கேயே தங்கினார். மன்னே குடும்பத்துடன் நெருக்கமாகப் பழகும்போது, அவரது 2-வது மகளுடன் காதல் ஏற்பட்டது. கடந்த மே மாதம் இரு வருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் ஹேமந்தின் நடத்தை மீது அவரது மனைவிக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது. அவர் வேலை விஷயமாக மியாபூருக்கு அடிக்கடி சென்று வந்ததால், அவரது மனைவி நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தார். தகாத முறையில் உடலுறவு அவர் ஹேமந்தின் செல்போனை சோதித்த போது, அவரது கணவர் ஹேமந்த் பல பெண்களுடன் தகாத முறையில் உடலுறவு கொள்ளும் வீடியோ காட்சிகள் இருந்தன. இதனால் இதனை கண்டதும் அவர் அதிர்ச்சியடைந்தார். இதனால் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஹேமந்த் கிராமத்தை விட்டுத் தப்பி ஓடிவிட்டார். நேற்று முன்தினம் அவர் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பியபோது, பாதிக்கப் பட்ட அவரது மனைவி கிராம மக்களிடம் இதுபற்றிக் கூறினார். கிராம மக்கள் ஹேமந்தை கடுமையாகத் தாக்கினர். அப்போது, அவர் தான் அனாதை அல்ல. எனக்கு தாய், தம்பி உள்ளனர். எனது மதம் வேறு. எனது உண்மையான பெயர் ஹேமந்த் அல்ல, நசார் என தெரிவித்தார். மனைவியின் புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரது செல்போனை பறி முதல் செய்து, அதில் உள்ள வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/wife-shocked-by-husbands-cell-phone




