சென்னை, தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் அலுவலர்கள் நடமாட்டம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றிற்கு இடவசதி குறைபாடு உள்ளது. புதிய கட்டிட வசதிகளை அமைப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற த.வெ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆட்சியாளர்களால் செய்ய முடியாததை முதல்-அமைச்சர் விஜய் செய்துள்ளார் என்ற நிலையான வரலாற்றுப் புகழ்ச்சியை பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோயம்பேடு, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகம், பட்டினம்பாக்கம், நந்தம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. பட்டினப்பாக்கத்தில் 24 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தற்போது நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அவை விதி 110-ம் மூலம் முதல்-அமைச்சர் விஜய் அதற்கான அறிவிப்பை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-secretariat-at-pattinapakkam-chief-minister-vijay-likely-to-make-an-announcement




