தவெக ஆட்சி அமைத்து 100 நாள்களை எட்டியிருக்கிறது. இது தொடர்பாக இந்த அரசு மேற்கொண்ட சாதனைகளாக நேற்று முதல்வர் விஜய்-யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. சட்டமன்றத்திலும், இந்த 100 நாள் ஆட்சி குறித்து பேசப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் சபாநாயகர் அப்பாவு தன் எக்ஸ் பக்கத்தில், ``தவெக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் தமிழகத்தில் சுமார் 200 கொலைகள், 10-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள், சுமார் 400 பாலியல் குற்றங்கள், தினம்தோறும் 2.5 வயது குழந்தை முதல் 85 வயது முதியவர் வரை பாலியல் வன்கொடுமை கொலைகள், 10-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் எனத் தமிழ்நாட்டைப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றிய விஜய் அவர்களே! நினைவிருக்கிறதா? முதல்வர் விஜய் "ஓவ்வொரு காவல் நிலைய மரணமும் அந்த ஆட்சியின் தோல்வி" என உங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதை மறந்து உங்கள் தோல்வி ஆட்சித் தொடர வேண்டுமா CM sir? முதல்வரைச் சுற்றியுள்ள நான்கு நண்பர்களும் இயக்குநர்களாக உருவாகி, 100 நாட்களில் விஜய்யை வைத்து ரீல்ஸ் எடுத்து சீரியல் தயாரித்து முதல்வரைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வாக்களித்த மக்களை ரீல்ஸ் பார்க்க வைத்திருப்பது மிகப்பெரிய அவமானமாக இல்லையா CM sir? நேற்று, 100-வது நாளில், போதைப்பொருள் பழக்கத்தைப் பற்றி காவல்துறைக்குத் தகவல் கொடுத்த அமுதன் மற்றும் தினேஷ் உள்ளிட்ட மாணவர்கள் போதைப்பொருள் கும்பலால் கொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்போடு எதிர்க்கட்சித் தலைவருக்கும், நாட்டு மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய முதல்வர், சினிமா பாணியில் தனக்குப் பதிலாக ‘டூப்’களை பதில் சொல்ல வைத்து தமிழகத்தையே தலைகுனிய வைத்துவிட்டு ஓடி ஒளிவது வெட்கமாக இல்லையா CM sir?" எனப் பதிவிட்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; சோளிங்கர் தவெக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/appavu-has-criticized-breakdown-of-law-and-order-under-tvk-government




