சென்னை, ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ள ‘பிளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவுதம் கார்த்திக்கின் அடுத்த படம் ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஆகஸ்ட் 16, 1947’, ’தேவராட்டம்’, ‘பத்து தல’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற கவுதம் கார்த்திக் தற்போது ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே. பாபு தயாரிக்கும் ‘பிளடி பாலிடிக்ஸ்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். செல்வராகவன் இந்த படத்தை அறிமுக இயக்குநர் தினா ராகவன் எழுதி இயக்குகிறார். இதில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அஞ்சனா நேத்ருன், ரோபி, பி. வாசு, வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். வெளியானது டீசர் இந்நிலையில், ‘பிளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள அரசியல் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/gautham-karthik-in-a-political-setting-bloody-politics-teaser-sends-expectations-soaring



