நடிகர் தனுஷ் இன்று அதிகாலை மலைக்கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு, பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.முக்கிய விழா மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதேபோல் அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் அவ்வப்போது பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் செயல்பட்டு வரும் தனுஷ், தற்போது 'ஓம்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷின் 56வது படத்தின் படப்பிடிப்பு பூஜை நேற்று நடைபெற்றது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன், காளிவெங்கட், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த நிலையில், நடிகர் தனுஷ் இன்று அதிகாலை தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா மற்றும் அப்பா, அம்மா, அக்கா உள்ளிட்ட குடும்பத்தினருடன் பழனிக்கு வருகை தந்தார். அதிகாலை 6 மணியளவில் மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை வழியாக குடும்பத்தினருடன் மலைக்கு சென்றார். தொடர்ந்து மலைக்கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு, பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்தார். சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து சிறிது நேரம் கோவிலில் இருந்த தனுஷ், பின்னர் ரோப் கார் மூலம் மலைக்கோவிலில் இருந்து அடிவாரத்திற்கு வந்தார். நடிகர் தனுஷ் வருகையையொட்டி பழனி மலைக்கோவில் மற்றும் அடிவார பகுதியில் பக்தர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டது. மலைக்கோவில் பகுதியில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாத நிலையில், அடிவாரத்திற்கு வந்த தனுஷை பார்த்த ஏராளமான பக்தர்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டனர். சாமி தரிசனம் முடித்த பின்னர் நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டு சென்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actor-dhanush-sami-darshan-with-his-family-at-palani-temple




