மதுரை, அறுபடைவீடுகளில் 6-வது படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோவில், மதுரைக்கு அருகில் உள்ள அழகர்மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள மலைப்பகுதி சோலைமலை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மூலவர் சோலைமலை முருகன் என்று அழைக்கப்படுகிறார். கும்பாபிஷேக விழா இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கோவில் வளாகத்தில் யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டு, யாகசாலைகள் அமைக்கப்பட்டன. கடந்த 1-ந் தேதி முதல் மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் சிவாச்சார்யார்களின் வேதமந்திரங்களுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்ற நிலையில், நேற்று(சனிக்கிழமை) 5-வது கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை விநாயகர் பூஜையுடன் நடைபெற்றது. பின்னர் காலை 5.15 மணிக்கு மகா பூர்ணாகுதி நிறைவு பெற்றதும் புனித தீர்த்தக்குடங்கள் புறப்பட்டன. தொடர்ந்து 5.45 மணிக்கு கும்பாபிஷேக விழா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் இந்த கும்பாபிஷேகத்தில் அதிகாலை வேளையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பழமுதிர்சோலை முருகன் கோவில் முழுவதும் சுமார் ஒன்றரை டன் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்காக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/devotional/kumbabishekam-ceremony-at-pazhamudircholai-murugan-temple-decorated-with-15-tonnes-of-flowers




