புதுடெல்லி, தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என்று அண்மையில் கூடிய காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட கர்நாடகா ஆலோசித்து வருகிறது இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். காவிரியிலிருந்து நீர் திறக்க ஆணையம் உத்தரவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். காவிரி நீர் பங்கீட்டை நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டன. இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்கின்றன. காவிரி மேலாண்மை ஆணையம் சார்பில் இதுவரை 53 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. கடைசி கூட்டம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி கூடியது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/cauvery-management-authority-meeting-begins




