சென்னை, சென்னையில் நடந்த பட விழாவில் நானி பேசும் போது, "முடியை நீளமாக வளர்த்து சடை பின்னி பராமரிப்பது ரொம்ப கஷ்டம் தான். ஆனால் எப்படித்தான் பெண்கள் கூந்தலை வாழ்நாள் முழுவதும் பராமரிக்கிறார்களோ. அவர்களுக்கு பெரிய கும்பிடு போடலாம். "என்றார். 'தி பாரடைஸ்' தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி, தற்போது ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடித்துள்ள புதிய படம், 'தி பாரடைஸ்'. எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நானி இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கயாடு லோகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மோகன் பாபு சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசை 'தி பாரடைஸ்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'தி பாரடைஸ்' திரைப்படம் செப்டம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நானி ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியின் முந்தைய வெற்றியை தொடர்ந்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சடையுடன் நடித்த நானி இந்த நிலையில், சென்னையில் நடந்த பட விழாவில் நானி பேசும் போது, "முடியை நீளமாக வளர்த்து சடை பின்னி பராமரிப்பது ரொம்ப கஷ்டம் தான். படப்பிடிப்பு நடந்த 160 நாட்களே எனக்கு போதும் போதும் என்றாகி விட்டது. ஆனால் எப்படித்தான் பெண்கள் கூந்தலை வாழ்நாள் முழுவதும் பராமரிக்கிறார்களோ. அவர்களுக்கு பெரிய கும்பிடு போடலாம். இந்த விஷயத்துக்காகவே பெண்கள் மீது தனி மரியாதையே எனக்கு வந்திருக்கிறது. பெண்கள் சடை பின்னியிருந்தால் ரசிக்கலாம். ஆனால் ஹீரோ சடை பின்னி இருந்தால் ரசிகர்கள் ஏற்பார்களா? என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனாலும் தைரியத்துடன் நடித்தேன். ரசிகர்களும் ஏற்றுக்கொண்டார்கள். 'வெப்பம்', 'ஆஹா கல்யாணம்' என்று தமிழில் நான் நடித்த படங்கள் எடுபடவில்லை. ஆனால் நான் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் 'டப்' செய்து வெளியாகி 'ஹிட்' அடிக்கின்றன. இந்தப்போக்கு பிடித்துவிட்டது. இதனால் இப்படியே செல்லலாம் என்று முடிவு எடுத்துள்ளேன். நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயம் தமிழில் நடிப்பேன்", என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/a-big-salute-to-women-nanis-lively-remarks-about-braids




