நடிகர் சூரியின் 'மண்டாடி’ படத்தைப் பார்த்து படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'மண்டாடி' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரித்திருந்த இந்தப் படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருந்தார். 'மண்டாடி' படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். "இந்தத் தேடலில் நிறைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறேன்; தூக்கம் இல்லாத நாள்கள்."- சித்து எமோஷனல் 'மண்டாடி’ படக்குழுவைப் பாராட்டிய கமல்ஹாசன் இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியிருக்கிறார். படக்குழுவினரிடம் நேரில் சந்தித்து பேசிய கமல்ஹாசன், "டயலாக் எல்லாம் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். எனக்கு பிடித்திருந்தது. நான் சினிமா ரசிகன். ஆரம்பத்திலேயே இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்காது (சூரியைப் பார்த்து கமல்ஹாசன்) பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் தேடி அலையும் சப்ஜக்ட் இது. பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது" என்று பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/kollywood/kamal-hassan-praises-mandaadi-movie-team




