சென்னை, தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏவை முதல்-அமைச்சர் கைகொடுத்து தூக்கிவிட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல்-அமைச்சர் பதிலுரை காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக மீது அமலாக்கத்துறை வைத்த பல குற்றச்சாட்டுகள் பற்றி பேசியிருந்தார். கடந்த ஆட்சியில் திமுக எல்லா துறைகளிலும் ஊழல் செய்திருக்கிறது. கட்சி நிதி என்ற பெயரில் உதயநிதிக்கும், மு.க ஸ்டாலினுக்கும் பணம் சென்றிருக்கிறது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார். திமுக உறுப்பினர்கள் அமளி இதையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்பாக தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தரையில் அமர்ந்து தர்ணா மேலும் சபாநாயகரின் இருக்கைக்கு முன்பு தரையில் அமர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது முதல்-அமைச்சர் விஜய்யின் இருக்கைக்கு முன்னே திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் (திருவையாறு தொகுதி) கீழே அமர்ந்து தர்ணா செய்தார். அதன்பின்பு அவர் எழுவதற்கு முயன்றபோது தடுமாறினார். கைகொடுத்த முதல்-அமைச்சர் அப்போது முதல்-அமைச்சர் விஜய், துரை சந்திரசேகரனின் கையை பிடித்து, அவரை தூக்கி விட்டார். மேலும், தர்ணா செய்வதற்கு உதவும் வகையில் முதல்-அமைச்சர் தனது டேபிளை கொஞ்சம் பின்னே இழுத்துப் போட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/cm-vijay-helps-dmk-mla-video-goes-viral



