மாஸ்கோ, ரஷியா தலைநகர் மாஸ்கோவின் பரிகட்னயா நகரில் ஓட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஓட்டலில் நேற்று இரவு வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த ஓட்டலுக்கு ஒரு பெண் வந்துள்ளார். அந்த பெண் வைத்திருந்த பையில் வெடிகுண்டு இருந்துள்ளது. 3 பேர் பலி ஓட்டலில் இருந்த காவலாளி அந்த பையை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பெண், காவலாளி, ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/russia-restaurant-bombing-kills-three




