கோவை, தமிழகத்தில் கஞ்சா, கொக்கைன், குட்கா உள்பட அனைத்து வகையான போதைப்பொருட்கள் விற்பனை, பயன்படாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வெளிமாநிலங்களில் இருந்து பஸ், ரெயில்கள், விமானங்கள் மூலம் போதைப்பொருள் மாநிலத்திற்குள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீசார் சோதனை இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக கோவையில் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதல் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள குடியிருப்புகள், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள தனியார் விடுதிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய தங்கும் விடுதிகளில் போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட கஞ்சா கிலோ கணக்கிலும், மெத்தம்பேட்டமைன் மற்றும் குட்கா போன்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சோதனையின் முடிவில் எத்தனை கிலோ போதைப்பொருள் பறிமுதல், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை போலீசார் வெளியிட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-police-launch-early-morning-crackdown-on-drug-trafficking




