நகரி, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ராயவலசா அருகே நவ்படாவில் இருந்து டெக்கலியை நோக்கி ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே தண்ட வாளத்தை கடக்க முயன்ற பிளஸ்-2 மாணவர்கள் 5 பேர் மீது ரெயில் மோதியது. போலீசார் இந்த விபத்தில் விசாகராவ், சரத், திலீப், சிவா ஆகிய 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராஜா என்பவர் படுகாயமடைந்த நிலையில், டெக்கலி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/four-plus-2-students-killed-after-being-hit-by-a-train-in-andhra-pradesh




