மதுரை, மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சர் விஜய், விமானம் மூலம் நாளை (திங்கட்கிழமை) மதுரை வந்து அரசு விழாக்களில் பங்கேற்கிறார். நிகழ்ச்சிகளை முடித்து மீண்டும் சென்னை செல்கிறார். முதல்-அமைச்சரியின் வருகையை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், மதுரை விமான நிலையம், விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், முதல்-அமைச்சர் பயணிக்கும் வழிகள், தங்குமிடம், செல்லும் இடங்கள், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் நாளை டிரோன் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. மேலும், தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-arriving-tomorrow-intensive-security-arrangements-in-madurai




