சென்னை, இந்திய விமானப்படையின் முதலாவது தரைப்பாதுகாப்பு பயிற்சி கல்லூரி, சென்னை ஆவடி விமானப்படை நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பயிற்சி கல்லூரி சென்னையில் உள்ள ஆவடி விமானப்படை நிலையத்தில் 'இந்திய விமானப்படை தரைப்பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரி' 07 செப்டம்பர் 2026 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. விமானப்படைத் தளங்களின் தரைப்பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில் இது தொடங்கப்பட்டுள்ளது. விமானப்படை தலைமையக நிர்வாகப்பிரிவுக்கு பொறுப்பு வகிக்கும் ஏர் மார்ஷல் எஸ். சிவகுமார் இக்கல்லூரியைத் தொடங்கி வைத்தார். விமானப்படை தளங்களின் தரைப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் தயார்நிலை மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதில் இக்கல்லூரி கவனம் செலுத்தும். புதிதாக நிறுவப்பட்ட இம்மையத்தில் முதல் பயிற்சி வகுப்பும் உடனடியாக தொடங்கியது. இப்பயிற்சிக்கல்லூரியின் தொடக்க விழாவில் விமானப்படையின் பராமரிப்புப்பிரிவு, பயிற்சிப்பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள், முப்படை அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-training-college-in-avadi-to-strengthen-air-force-base-security



