ஐச்சி-நகோயா, ஆசிய விளையாட்டில் டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டையில் இந்தியா அசத்தியுள்ளநிலையில், பேட்மிண்டனில் வெளியேறியுள்ளது. ஆசிய விளையாட்டு ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, ஜப்பான், சீனா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். டேபிள் டென்னிஸ் இதில் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்றில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. முதல் ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா தோல்வியடைந்தார். இதையடுத்து யஷஸ்வினி கோர்படே வெற்றி பெற்று ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். 3-வது ஆட்டத்தில் தியா சித்தாலே தோல்வியடைந்ததால் தாய்லாந்து 2-1 என முன்னிலை பெற்றது. பின்னர் யஷஸ்வினி கோர்படே வெற்றி பெற்று 2-2 என சமன் செய்தார். தீர்மானிக்கும் 5-வது ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 9-11, 11-6, 12-10, 11-8 என்ற கணக்கில் சுதாசினியை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். காலிறுதியில் இந்திய அணி வடகொரியாவை எதிர்கொள்கிறது. பாக்சிங் பெண்களுக்கான குத்துச்சண்டை 51 கிலோ எடைப்பிரிவு ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்றில் இந்தியாவின் சாக்சி சவுத்ரி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரா வில்லேகாஸை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்றுக்கு முன்னேறிய சாக்சி சவுத்ரி, அடுத்ததாக கஜகஸ்தானின் அலுவா பால்கிபெகோவாவை எதிர்கொள்கிறார். பேட்மிண்டன் பெண்களுக்கான பேட்மிண்டன் அணிப் பிரிவு காலிறுதியில் இந்திய அணி ஜப்பானிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-stellar-performance-in-table-tennis-and-boxing-india-eliminated-in-badminton




