சென்னை, தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் சுப்பா ராவ், கூடுதல் பொதுமேலாளர் விபின்குமார், துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு தலைமையகத்தின் பிரதான நுழைவாயில் மற்றும் உள் வளாகங்கள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கேரள பாரம்பரிய உடை குறிப்பாக, பெண் ஊழியர்கள் இணைந்து மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும்விதமாக அமைத்திருந்த பிரமாண்ட 'அத்தப்பூக்கோலம்' அனைவரையும் கவர்ந்தது. ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கேரள பாரம்பரிய உடைகளான கசவு புடவை மற்றும் முண்டு (வேட்டி) அணிந்து வந்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். கேரளாவின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பியூஷன் திருவாதிரை நடனம் மற்றும் ஓணம் குழுப் பாடல் போன்ற பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செழிப்பு. மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் பண்டிகையை அனைவரும் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-in-southern-railway-officials-in-traditional-kerala-attire




