ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி, பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது என அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே (Javier Milei) கடுமையாக விமர்சித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபையின் பொது விவாதக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ``ஐ.நா சபை என்பது நல்நோக்கம் கொண்ட அதிகாரிகளைப் போல வேடமிட்டு, சொகுசு வாழ்க்கை வாழும் பேராசை பிடித்த ஒட்டுண்ணிகளைப் பராமரிக்கும் ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது. வன்முறை, பயங்கரவாதம் மற்றும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறி, அவற்றை ஐ.நா ஊக்கப்படுத்துகிறது. ஐநா சபை இஸ்ரேல் விவகாரத்தில் ஐ.நா உறுப்பினர்கள் எப்போதும் எங்கள் நாட்டுக்கு எதிராகவே வாக்களித்து வருகின்றனர். ஃபாக்லேண்ட் (மால்வினாஸ்) தீவுகள் மீதான அர்ஜெண்டினாவின் உரிமை கோரலை மீண்டும் வலியுறுத்துகிறோம். பிரிட்டானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இத்தீவுகளின் பகுதியில் எண்ணெய் பிரித்தெடுக்கும் "சீ லயன்" (Sea Lion) திட்டத்தை எதிர்க்கிறோம். இத்தீவு விவகாரத்தில் ஐ.நா தீர்மானங்களை அமல்படுத்தத் தவறிவிட்டது. எனவே, ஐக்கிய ராஜ்யத்துடன் (UK) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அறிவியல் என்ற பெயரில் மனித குலத்தின் மீது நடத்தப்பட்ட சமூகக் கட்டுப்பாட்டு பரிசோதனைதான் கொரோனா ஊரடங்கு. இதன் காரணமாகவே அர்ஜெண்டினா உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) வெளியேறியது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முன் கூட்டியே கட்டுப்பாடுகளை விதிப்பது தவறான அணுகுமுறை. அர்ஜெண்டினா AI தொழில்நுட்பத்திற்கு எந்தத் தடையும் விதிக்காது. Javier Milei அதை சுதந்திரமாக ஊக்குவிக்கும். அர்ஜெண்டினா சுதந்திரச் சந்தை முதலாளித்துவத்தைத் தழுவி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் உறுதியாகக் கைகோத்துள்ளது. மேலும், இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துகொள்கிறேன். சர்வதேச ஒத்துழைப்பு என்பது மற்ற நாடுகளுக்கு அடிபணிவது அல்ல. அர்ஜெண்டினா உலக அரங்கில் தனது உரிமையையும் பெருமையையும் மீட்டெடுக்கும்." என்றார். "ஈரானை அழித்துவிடுவேன்"- ட்ரம்ப் பேச்சு; 'பகவந்த் கேசரி' பாலய்யாவை வைத்து ட்ரம்பை கலாய்க்கும் ஈரான் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/the-un-has-become-a-useless-organization-says-argentine-presidents-scathing-criticism



