சென்னை, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய்யின் அரசு அலுவல் பயன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ புகைப்படம் மாற்றப்பட்டு, புதிய படம் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் விமர்சனம் கடந்த மே மாதம் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியிடப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வைக்கப்பட்டது. ஆனால், அந்த புகைப்படத்தில் முதல்-அமைச்சரின் சிரிப்பு இயல்பாகவும் அழகாகவும் இல்லை என்று தவெக தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு விமர்சித்து வந்தனர். பழைய புகைப்படத்தை மாற்றிவிட்டு, வேறொரு படத்தை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன. புகைப்படம் மாற்றம் பொதுமக்களின் இந்த விமர்சனங்களை அடுத்து, அரசு அலுவலகங்களில் வைப்பதற்கான முதல்-அமைச்சர் விஜய்யின் புத்தம் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டது. தலைமைச் செயலகம் முதல் கிராம ஊராட்சிகள் வரை உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழக அரசு அலுவலகங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் விளம்பரங்களில் இந்த புதிய புகைப்படத்தை விரைவில் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செலவு குறித்து நெட்டிசன்கள் கேள்வி அதே நேரத்தில், மாநிலம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான அரசு அலுவலகங்களில் படங்களை மாற்றுவதற்கு பெரிய அளவில் அரசு நிதி செலவாகும் என்பதால், இதற்கு பதிலாக அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தலாம் என இணையத்தில் சிலர் மாற்று கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். மகிழ்ச்சி மேலும், ஜோதிடரின் ஆலோசனையின் பேரில்தான் இந்த மாற்றம் செய்யப்பட்டதா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும், தங்களது நீண்ட நாள் விருப்பப்படியே முதல்-அமைச்சரின் புகைப்படம் மாற்றப்பட்டதால் உற்சாகமடைந்த தவெக தொண்டர்கள், தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-cm-official-portrait-changed




