ஜகார்த்தா, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் இருந்து நேற்றைய தினம் 'எம்வி ஜூன் ஆஸ்டர்' (MV June Aster) என்ற என்ற பயணிகள் படகு புறப்பட்டு சென்றது. அந்த படகு மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கோரோன் (Coron) என்ற பகுதி அருகே எதிர்பாராத விதமாக படகில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என மொத்தம் 134 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 42 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதே சமயம், படகில் பயணித்த சுமார் 80-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி இருப்பதாகவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/philippines-fire-on-passenger-boat-5-dead-over-80-missing




