ஆகஸ்டு மாதத்தில் யு.பி.ஐ. பரிவர்த்தனை ரூ.30 லட்சம் கோடியை எட்டி சாதனை படைக்கப்பட்டது. ஆகஸ்டு மாதத்தில் 2,451 கோடி முறை பரிவர்த்தனை நடைபெற்று புதிய உச்சம் அடைந்தது. புதிய புரட்சி இந்திய பொருளாதாரத்தின் புதிய புரட்சியாக கடந்த 2015-ம் ஆண்டில் ஆகஸ்டு 25-ந்தேதி அன்று ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் யு.பி.ஐ. என்னும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. யு.பி.ஐ. சேவை அறிமுகமாகி தற்போது 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மிகவும் விரும்பப்படும் பரிவர்த்தனை சேவையாக யு.பி.ஐ. உருவெடுத்துள்ளது. சாதாரண டீக்கடைகளில் இருந்து பல்பொருள் அங்காடிவரை, அனைத்து சாமானியன் முதல் பெரும் கோடீஸ்வரர் முதலாளிகள் வரை பூடான், பிரான்ஸ், அரபு அமீரகம் உள்ளிட்ட 11 நாடுகளில் பாரபட்சமின்றி யு.பி.ஐ. சேவையை அணுகி வருகின்றனர். ஆகஸ்டு மாத கணக்கு இதனால் நாளுக்கு நாள் யு.பி.ஐ. மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை மதிப்பும், பரிவர்த்தனைகளும் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் ஆகஸ்டு மாதத்தில் யு.பி.ஐ. பரிவர்த்தனை ரூ.30 லட்சம் கோடியை எட்டி சாதனை படைக்கப்பட்டது. ஆகஸ்டு மாதத்தில் 2,451 கோடி முறை பரிவர்த்தனை நடைபெற்று புதிய உச்சம் அடைந்தது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் முன்னெடுப்பான இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (என்.பி.சி.ஐ.) வெளியிட்டுள்ளது. சாதனை அளவு அதன் தரவுகளின் விவரம் பின்வருமாறு:- கடந்த ஆகஸ்டு மாதத்தில் யு.பி.ஐ. மூலம் ரூ.29.82 லட்சம் கோடி அளவிற்கு நிதிப் பரிவர்த்தனைகள் நடைபெற்று புதிய சாதனையை நெருங்கியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் ரூ.24.85 லட்சம் கோடியாக இருந்ததுடன், 20 சதவீத வளர்ச்சியாகும். முன்னதாக மே மற்றும் ஜூலை மாதங்களில் பரிவர்த்தனை மதிப்பு ரூ.29.9 லட்சம் கோடியாக இருந்தது. அதேவேளையில், பரிவர்த்தனை எண்ணிக்கையில் ஆகஸ்டு மாதத்தில் 2,451 கோடி (22 சதவீத வளர்ச்சி) என்ற புதிய வரலாற்று உச்சம் எட்டப்பட்டுள்ளது. இது ஜூலையில் 2,366 கோடியாகவும், ஜூன் மாதத்தில் 2,272 கோடியாகவும், மே மாதத்தில் 2,320 கோடியாகவும் இருந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/new-peak-in-10-years-massive-milestone-in-upi-transactions




