சென்னை, 2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் முகாம் இன்று தொடங்கியது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை மாநகராட்சியின் சார்பில் 2 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி (Anti Rabies Vaccination) மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் மாபெரும் அளவிலான முகாம் முதற்கட்டமாக திருவொற்றியூர், மணலி மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் இன்று தொடங்கியது. பங்கேற்பு இதன் ஒரு பகுதியாக, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் பணிக்கான வாகனத்தினை இணை ஆணையாளர் (சுகாதாரம்) ஸ்ரேயா பி. சிங், வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் வி.சிவா ஆகியோர் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்புற பகுதியில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/rabies-vaccination-for-2-lakh-stray-dogs-chennai-corporation




