திருவனந்தபுரம், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றும் குணப்படுத்த முடியாத மோசமான நோய்களால் அவதிப்படும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தெரு நாய்களை கொல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைப் பின்பற்றி கேரள அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. எந்த நாய்களுக்கு அனுமதி? சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியாத நிலையில் உள்ள நாய்கள், கடுமையாக காயமடைந்த நாய்கள், வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட நாய்கள் அல்லது அதற்கான அறிகுறிகளை கொண்ட நாய்கள் ஆகியவற்றை கருணைக் கொலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தனிக்குழு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. விஷம் கொடுத்தோ, சுட்டோ கொல்லக் கூடாது தகுதி பெற்ற கால்நடை மருத்துவர் அங்கீகரிக்கும் மருந்தை நரம்பு வழியாக செலுத்தியே கருணைக் கொலை செய்ய வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தெரு நாய்களுக்கு விஷம் கொடுத்தோ அல்லது துப்பாக்கியால் சுட்டோ கொல்லக் கூடாது என்றும் வழிகாட்டுதல்களில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/kerala-government-permits-the-euthanasia-of-stray-dogs-that-pose-a-danger-to-the-public




