திருப்பூர், தற்போது 14 கிலோ பெட்டி தக்காளி ரூ.350 ஆக உயர்ந்துள்ளது. தக்காளி சாகுபடி மடத்துக்குளம், குமரலிங்கம், கணியூர், காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது போதிய மழை இல்லாததால் செடிகள் காய்ந்து விட்டன. இதனால் தக்காளி செடிகளை அகற்றிவிட்டு, அடுத்த பருவத்திற்கு ஏற்ற பயிர்களை சாகுபடி செய்ய நிலத்தை உழுது தயார் செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தக்காளி சீசன் முடியும் தருவாயில் சந்தையில் விலை உயர்ந்துள்ள போதிலும், பெரும்பாலான தோட்டங்களில் உள்ள செடிகளில் போதிய பழங்கள் இல்லை. இதனால் சந்தைக்கு வரத்து குறைந்து விட்டது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 கிலோ பெட்டி ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையானது. தற்போது 14 கிலோ பெட்டி தக்காளி ரூ.350 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 14 கிலோ பெட்டி தக்காளி ரூ.200-க்கும் குறைவாகவே விற்பனையானது. இந்த விலை, பழங்களை பறிப்பதற்கான கூலிக்கும், மண்டிகளுக்கு கொண்டு செல்லும் வாகன வாடகைக்குமே சரியாக இருந்தது. இதனால் செய்த செலவை கூட எடுக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினோம். விலை உயர வாய்ப்பு ஆனால் தற்போது விலை உயர்ந்தபோதும் செடிகளில் பழங்கள் இல்லை. எனவே இந்த விலை உயர்வால் எங்களுக்கு எந்தபயனும் இல்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். அதேவேளையில், சந்தைக்கு வரத்து மேலும் குறையும் பட்சத்தில் வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் உயருமோ? என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் நிலவுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tomato-prices-in-tiruppur-have-skyrocketed




