பெங்களூரு, தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கர்நாடகத்தில் உள்ள கபினி அணியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு மின்னல் வேகத்தில் எகிறியுள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து நேற்று வரை சீராக இருந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் நீர்வரத்து விநாடிக்கு 15,500 கன அடியாக அதிரடியாக உயர்ந்தது. அணை மிக வேகமாக நிரம்பி வருவதால், அதன் பாதுகாப்பை வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில், 8 மணி நிலவரப்படி கபினி அணியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/increase-in-water-inflow-12000-cusecs-of-water-released-from-kabini-dam




