புதுடெல்லி, டெல்லியில், தொடர்ந்து 2 ஆம் ஆண்டாக செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவை காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே புறக்கணித்தனர். 80-வது சுதந்திர தின விழா டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்ற மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொள்ள வில்லை. தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர அவர்கள் தின விழாவை புறக்கணித்தனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 2024-ம் ஆண்டு நடை பெற்ற சுதந்திர தினவிழா வின்போது சர்ச்சை எழுந்தது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மத்திய மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொண்டவர் ஆவார். செங்கோட்டையில் நடை பெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வழக்கமான மரபு மற்றும் நெறிமுறை களுக்கு மாறாக கடைசி வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. ராகுல்காந்திக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கியது மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமரி யாதை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் இருக்கை அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டதாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்து இருந்தது. 2-வது ஆண்டாக புறக்கணிப்பு அரசின் நெறிமுறைகளின்படி இத்தகைய முக்கிய விழாக்களின்போது எதிர்க்கட்சி தலைவர் முன்வரிசையில் அமர வைக்கப்பட வேண்டும் என்பது வழக்கமாகும். இதன் காரணமாகவே ராகுல்காந்தியும், கார்கேவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சுதந்திர தின விழாவில் பங்கேற்க வில்லை. முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு விவாகரங்களில் மத்திய அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்ததால், மாநிலங்களவை மற்றும் மக்களவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/mallikarjun-kharge-rahul-gandhi-skip-independence-day-event-for-2nd-straight-year




