சென்னை, கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார், ஆங்கிலேயரை எதிர்த்துக் கப்பல் விட்டார். இது மட்டுமா வ.உ.சி. திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார், தொல்காப்பிய உரையைப் பதிப்பித்துள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார், அந்நாளிலேயே தொழிலாளர் உரிமைக்காகப் போராடியுள்ளார். செக்கிழுத்த செம்மலுக்குச் சிறப்பு இத்தகைய பன்முக ஆளுமையான வ.உ. சிதம்பரனாரின் வாழ்வும் பணிகளும் எல்லோரையும் சென்றடையும் வகையில் கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு செக்கிழுத்த செம்மலுக்குச் சிறப்பு சேர்த்தோம். அவற்றுடன், 1908 திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவுச் சின்னத்தையும் அறிவித்தோம். தற்போதைய அரசும் அதனைக் கைவிடாமல், நிறைவேற்றிட வேண்டும் எனத் தமிழர்தம் சிந்தையில் இருந்து என்றும் அகலாத சிதம்பரனாரின் பிறந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiyakath-thiruvulam-vo-chidambaranars-birthday-mk-stalins-praise




