மாமல்லப்புரத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை.29) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அன்புமணி ராமதாஸ் இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, ``தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பு சட்டமன்றத்திலே ஆளுநர் உரையில் வந்திருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் மருத்துவர் ஐயா (ராமதாஸ்) அவர்களும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான். அனுபவம் இல்லாத தவெக அரசுக்கு நாம் ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கி வருகிறோம். எனக்கு ஈகோ இல்லை. தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. பாமகவில் நிரந்தர தலைவர் என யாரும் இல்லை. நம்முடைய கட்சி ஜனநாயகக் கட்சி. இனி பேசும்போது என்னை நிரந்தர தலைவர் என யாரும் குறிப்பிட வேண்டாம். மருத்துவர் ஐயா வாழும் காலத்திலேயே பாமக தமிழ்நாட்டை ஆள வேண்டும். 2031-ல் பாமக ஆட்சி அமைக்கும் வகையில் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். இன்னும் ஒரு சில மாதங்களில் ஆந்திராவில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும். அன்புமணி, ராமதாஸ் மக்கள் அங்கு அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். வருகின்ற சனிக்கிழமை பனையூரில் 100 முக்கிய நபர்கள் வந்து சந்திக்க இருக்கிறார்கள். மூன்று மாதங்களாக வேலை நடந்துக்கொண்டிருக்கிறது. அடுத்தக் கட்டத்திற்கு இதனை நாம் எடுத்து செல்லவேண்டும்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/anbumani-says-pmk-will-start-in-andhra



