நகோயா, ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு ஆக்கி போட்டியில் கலந்து கொண்டுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று நடந்த தனது 4-வது ஆட்டத்தில் ஜப்பானை சந்தித்தது. இதில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை சாய்த்து தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்று தனது பிரிவில் முதலிடத்தில் நீடிப்பதுடன் அரைஇறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது. இந்திய அணியில் அபிஷேக் (15-வது நிமிடம்), கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (40-வது நிமிடம்) கோலடித்தனர். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை எதிர்கொள்கிறது. பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19, 21-14 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சி பின் சியானை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/hockey/asian-games-indian-hockey-team-advances-to-semi-finals




