இருமல் மற்றும் சளி மருந்துகளை இளம் குழந்தைகளுக்கு விவேகத்துடன் பரிந்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பாக 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதாரப்பணிகள் இயக்குனரகம் கடந்த ஆண்டு பரிந்துரைத்தது. இதைத்தொடர்ந்து 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சில குறிப்பிட்ட கலவை மருந்துகள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. இந்த நிலையில் இருமல் மற்றும் சளி மருந்துகளை 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை அந்த மருந்து பாட்டில் லேபிள்களில் அச்சிட மருந்து ஆலோசனைக் கமிட்டியிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இது ஏற்கப்பட்டால் விரைவில் இந்த வாசகங்களுடன் இருமல் மற்றும் சளி மருந்து பாட்டில்கள் விற்பனைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/warning-message-on-cough-syrup-bottles




