வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டினுபா நகரில் வசித்து வந்தவர் கவால் பிரீத் சிங் (வயது 50). இந்தியரான இவர், அங்கு 'ரவுண்ட் டேபிள் பீட்சா' என்ற உணவ கத்தை நடத்தி வந்தார். இந்த பீட்சா கடையை மறைவிடமாகப் பயன்படுத்தி, அவர் பின்னணியில் பெரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ அவரது வீடு மற்றும் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து சுமார் 18 கிலோ மெத்தம்பேட்டமைன் என்ற கொடிய போதைப் பொருள், 3 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் ரூ.8 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட கவால் பிரீத் சிங் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை மற்றும் ரூ.84 கோடி வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/case-registered-against-indian-man-for-selling-drugs-in-the-us




