ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள், ஆயுதங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. ஈரானால் நீண்ட நாள்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது’ என்று திரும்பத் திரும்பக் கூறினார். கூறுகிறார். இனி கூறுவாரும்கூட. ட்ரம்ப் சொன்னது. ட்ரம்ப் இதை எத்தனை முறை கூறினாலும், கண்டிப்பாக ஒன்றை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும் – ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டால், ஈரான் இன்னும் எப்படிக் களத்தில் சண்டை செய்கிறது என்பதை. தற்போது ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிக்காவின் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளார். சையத் அப்பாஸ் அராக்சிMecca-விற்கு வரலாற்றில் முதன்முறையாக சவூதி எச்சரிக்கை! - மெக்காவைத் தாக்கியதா ஏமனின் ஹூதி? அந்த அறிக்கை அமெரிக்காவின் Operation Epic Fury (OEF)-ஐக் குறித்தது. இது ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கை ஆகும். அப்பாஸ் அராக்சி ஷேரிங்ஸ் அந்த அறிக்கையில் அராக்சி ஹைலைட் செய்திருக்கும் பாயிண்ட்டில், “ஈரானியத் தாக்குதல்கள் காரணமாகக் குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஈராக், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களில் இருந்த நூற்றுக்கணக்கான கட்டடங்களும் அமைப்புகளும் சேதமடைந்தும் முற்றிலும் அழிந்தும் போயுள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளையகம் (US CENTCOM) தெரிவித்துள்ளது. மேலும், இந்த மோதலின் போது (OEF) பல அமெரிக்கப் போர் விமானங்களும் சேதமடைந்துள்ளன. அழிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டிருக்கிறது. அமெரிக்க மத்திய கட்டளையகம் என்பது அமெரிக்காவின் ஒரு ராணுவ பிரிவாகும். இது தான் தற்போது ஈரான் மீது போர் தொடுத்துவரும் பிரிவு. அராக்சி ஷேர் செய்திருக்கும் அறிக்கையில், அமெரிக்காவின் என்னென்ன போர் விமானங்கள் சேதமடைந்திருக்கின்றன என்பதும் இடம்பெற்றிருக்கிறது. அராக்சி ஷேர் செய்த அறிக்கைBRICS: ஒன்றுகூடிய இந்தியா, சீனா, ரஷ்யா; ட்ரம்பிற்கு சொல்லும் Lesson! De Dollarisation புது வடிவிலா? பதிவு இந்த அறிக்கை குறித்து, “கட்டுக்கதை: ஈரான் ஆயுதமின்றி நிற்பதாகக் கூறுவது. உண்மை: நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவ மையங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. பல போர் விமானங்கள் சாம்பலாக்கப்பட்டுள்ளன. (ஆதாரம்: பென்டகன்) இது வெறும் தொடக்கம்தான். சரியான நேரத்தில் அனைத்து உண்மையையும் வெளிப்படுத்துவோம். ஈரானைப் பற்றிப் பொய்யான கதைகளைப் பரப்பியவர்களுக்கு, இதன் முடிவு நிச்சயம் இனிமையாக இருக்கப் போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார் அராக்சி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/araghchi-highlights-us-losses-in-operation-epic-fury-report




