'ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை பிரீத்தி முகுந்தன், தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். முதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு 'நாக்ஜில்லா', 'கண்ணப்பா', 'சர்வம் மாயா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். 'பிளாஸ்ட்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு பிரீத்தி முகுந்தன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'பிளாஸ்ட்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபிராமி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருந்த அவர், குறிப்பாக படத்தின் அதிரடி சண்டைக் காட்சிகளில் வெளிப்படுத்திய நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு மேலும் பல ஆக்ஷன் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், மாடலிங் துறையில் இருந்து திரைப்பட உலகிற்கு வந்த நடிகை பிரீத்தி முகுந்தன், தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் எதிர்கொண்ட அனுபவங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். தன்னம்பிக்கை இல்லாமல் தவித்தேன் இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் மாடலிங் செய்து கொண்டிருந்தபோது, எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு வயது 18. ஆனால், என்மீது எனக்கே நம்பிக்கை இல்லை. 'என்னால் ஆடிஷன் செய்ய முடியாது, என்னை நானே அவமானப்படுத்திக் கொள்வேன், எனக்கு நடிக்கத் தெரியாது' என்று பல்வேறு பயங்களுடன் இருந்தேன்" என்றார். தைரியம் கொடுத்த பெற்றோர் மேலும், "அந்த நேரத்தில் என் பெற்றோர் நேரடியாக கல்லூரி விடுதிக்கு காரில் வந்து என்னிடம் பேசினர். 'ஏன் முயற்சி செய்யக் கூடாது? பரவாயில்லை. இதுதான் தொடக்கம். நீ முயற்சி செய்து பார்க்க வேண்டும்' என்று அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி ஆடிஷனுக்கு அனுப்பினர். அவர்களின் அந்த வார்த்தைகள்தான் எனக்கு முதல் அடியை எடுத்து வைக்கத் தைரியம் தந்தது. அந்த முதல் ஆடிஷனில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அந்த அனுபவம்தான் சினிமா மீது தனக்கு ஒரு உண்மையான காதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-dont-know-how-to-act-blast-movie-actress-preethi-mukundhan-speaks




